வாணியம்பாடி அருகே 225 மது பாட்டில்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வாணியம்பாடி நகர காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் 225 மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி எடுத்துச் சென்றதாகக் கூறி திமுக பிரமுகர்களான அருண் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி