திருப்பத்தூர்: கையுறை இன்றி பணி செய்யும் தூய்மை பணியாளர்கள்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகிலுள்ள குருசிலாப்பட்டு பகுதியில் உள்ள கால்வாயை தூய்மைப் பணியாளர்கள் நிர்மலா மற்றும் சிவகாமி இருவரும் கையுறை இல்லாமல் சுத்தம் செய்து வந்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

அப்போது அந்தத் தூய்மைப் பணியாளர் "இந்த வீடியோவை எடுத்து அனுப்புங்கள் சாமி, உங்களுக்குப் புண்ணியமா போகட்டும்" என கூறியுள்ளார். மேலும், வீடியோ எடுத்த நபர் "கையுறை ஏதும் கொடுக்கவில்லையா?" என கேட்கும்போது, "ஊராட்சி மன்றத் தலைவர் எங்களுக்குக் கையுறை கொடுக்கவில்லை" என்று ஆதங்கம் தெரிவித்தார். மேலும், மற்றொருவர் "கலெக்டர் அலுவலகம் வந்து கூட நாங்கள் சொல்றோம்" என கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி