வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி மலை கிராமம் வழியாக நேற்று அதிகாலை 5:00 மணியளவில் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு அலுமினியம் லோடு ஏற்றிச் சென்ற சரக்கு லாரி, மலைப்பாதையின் 5வது வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், லாரியை ஓட்டிச் சென்ற திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாசம் (26) காயமடைந்தார். பேரணாம்பட்டு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.