திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில், அங்கு சிகிச்சை பெறும் குழந்தையின் உறவினரான பெண்மணிக்குக் காயம் ஏற்பட்டது. தலையில் சிமெண்ட் கட்டிகள் விழுந்ததில் அவருக்குக் காயமடைந்து, மருத்துவமனையிலேயே முதலுதவி அளிக்கப்பட்டு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளன. இது எதிர்பாராத விபத்து என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.