வேலூர்: துப்பாக்கியால் சுட்டதில் முதியவர் காயம் (VIDEO)

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பி. வீரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சகாதேவன் (65) இவர் விவசாயம் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய நிலத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டை அவிழ்க்கச் செல்லும்போது மர்ம நபர் யாரோ ஒருவர் குருவி சுடும் துப்பாக்கியால் சுட்டதில் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த பொருள் சகாதேவன் கன்னத்தில் பாய்ந்து மயங்கி விழுந்தார்.

 இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். விரைவாக பரிசோதித்த மருத்துவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நிலத்தில் இருக்கும்போது சகாதேவனின் கன்னத்தில் துப்பாக்கியின் பொருள் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி