இந்த பொதுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பாக மாவட்டம் முழுவதும் 71 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அந்த தேர்வு மையங்களில் 8035 மாணவர்கள், 7791 மாணவிகள் என மொத்தம் 15826 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில், இன்று கடைசி தேர்வு முடிவடைந்து வெளியே வந்த மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் சென்றனர். இதில் சில மாணவிகள் தங்களுடைய சக மாணவிகளின் முதுகில் ஆட்டோகிராப் போட்டும், குழு குழுவாக செல்பி எடுத்துக் கொண்டும் மகிழ்ந்து சென்ற காட்சிகளும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்