பகலில் மண் கடத்தல் கண்டுகொள்ளாத வருவாய் துறை அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் பாப்பதி அம்மன் கோவில் அருகே செல்லதுரை என்பவரின் நிலத்தில் டிப்பர் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண் கடத்தல் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதாகவும், கனிம வள கடத்தல்காரர்களுக்கு துணை போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி