ராணிப்பேட்டை தவெக உறுப்பினர் நீக்கம்!

வேலூரில் செங்கல் சூளை அதிபர்களிடம் மாதம் ரூ. 1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டியதாக தவெகவின் கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து, தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மிரட்டல் புகாரைத் தொடர்ந்து, விஜயகுமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி