திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில், நேற்று (06.05.2026) திடீரென திருப்பத்தூர், கந்திலி, மாடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென பெய்த இந்த மழையால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.