வேலூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, வரும் 15-ம் தேதி காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் ஒரு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடையுமாறு ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி