இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கற்பக ராஜா தலைமையில் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான கூப்பன் இன்று முதல் விநியோகிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கூப்பன் வழங்கப்படுதலையும் பொங்கல் பரிசு தொகுப்புகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளுக்கும் நுகர்வோருக்கு சென்றடையவும் அந்தந்த துறை அலுவலர்கள் கண்காணிக்கப்பட்டு எந்த வித புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் பொங்கல் பரிசு வினியோகித்து திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.