திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், லக்கி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர், அமீர் பாஷா மற்றும் அவரது மகன் தௌலத் பாஷா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு ஆனந்தன் வாங்கிய ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்த மா மற்றும் தேக்கு மரங்களை வெட்டி கடத்தியதாகவும், மேலும் நிலத்தில் இருந்த கனிம வளங்களையும் கொள்ளையடித்து விற்பனை செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.