திருப்பத்தூர்: ரூ. 10000வ்பணம் கொடுத்தால் சர்வே செய்ய முடியும் அதிகாரிகள் அராஜகம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தெக்குப்பட்டு பகுதியை சேர்ந்த சாமு அம்மாள் இவருடைய கணவர் யுவராஜ் இவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துவிட்டு வாரத்திற்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார்.

கணவரின் பெயரில் உள்ள சொத்தில் பாதியை தனது பெயருக்கு எழுதி வைத்துள்ளதாகவும் அதனை அளந்து கொடுக்க சர்வேரை அழைத்தால் சர்வேயர் பொன்னுமணியும் அதேபோல சிப்பந்தி ஆனந்தன் ஆகியோர் சேர்ந்து ரூ.10ஆயிரம் பணம் கேட்பதாகவும் அப்படி இல்லை என்றால் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என ஆணவமாக பேசி வருகின்றனர். ‌

எனவே தனது நிலத்தை அளந்து கொடுக்கவும் மேலும் பணம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தார்.

தொடர்புடைய செய்தி