இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த புத்தகரம் பகுதியைச் சேர்ந்த தேவன் மனைவி மூதாட்டி பாப்பா இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரின் பாதுகாப்பிற்காக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் தனது நாயை அழைத்துக்கொண்டு நிலத்திற்குச் செல்லும்போது அதே பகுதியில் மாட்டிறைச்சி கடை நடத்தி வரும் திம்மராயன் மகன் தீபக் என்பவரின் கடையருகே நாய் சென்றபோது வெட்டுக்கத்தியால் தலை மீதும் உடல் மீதும் வெட்டியுள்ளார்.
இதில் நாய்க்கு மண்டைப்பிளவு ஏற்பட்டு உடம்பின் மீதும் காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி பாப்பா இது குறித்து தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த தீபத்தின் உறவினரான தகாத வார்த்தைகளால் திட்டி மூதாட்டி பாப்பாவின் கழுத்தைப் பிடிக்க வந்து அடியாட்களுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் செய்வதறியாமல் படுகாயம் அடைந்த நாயை கால்நடை மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர்.