வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்இன்றும் நாளையும் (மே 29, 30) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்றும் நாளையும் (மே 29, 30) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.