இந்தச் சிலை 2000 ஆண்டு ஜனவரி 1-ல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நிலையில் இதற்கான ஆண்டு விழா நடத்தப் போவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளுவர் பலூன் பறக்க விடப்பட வேண்டும் என வேண்டும் என அரசு உத்தரவிட்டதன் காரணமாக
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு மாவட்ட நிர்வாகத்தால் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு பறக்கும் திருவள்ளுவரின் படம் பொறிக்கப்பட்ட ராட்சத பலுனின் ரம்மிய காட்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.