திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலத்தில், கணவரை இழந்த பெண் தனது மாமனாருடன் வசித்து வந்துள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 66 வயதான மாமனார் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால், பெண் 7 மாத கர்ப்பமான நிலையில் குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.