கடந்த சில தினங்களாக தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு வடதுறை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இவ்வளவு பெரிய மதிப்பீட்டில் நவீன விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான அடிப்படைத் தேவையான தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேபோல் ஆயிரம் அடி தோண்டினாலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் எங்கும் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில் நவீன விளையாட்டு அரங்கம் கட்டப்படும் வறண்ட பூமியில் ஆழ்துளைக் கிணறு போடும் பணி துவங்கியபோது 60 அடியில் தண்ணீர் பீச்சி அடித்ததால் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். துறை சார்ந்த அலுவலர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் சுமார் 40 வருடங்களாக இந்த அளவுக்குக் குறைவான அடி ஆழத்தில் தண்ணீர் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இடைத் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு - வைகோ அறிவிப்பு