திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி கோவிந்தராஜ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திருப்பதி தலைமையில், திம்மனாமுத்தூர் ஊராட்சி மற்றும் ஏகே மோட்டூர் ஊராட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து அவர் கட்சியில் இணைந்தார்.