திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்னாரப்பட்டி பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் திருப்பத்தூர் சிங்காரப்பேட்டை சாலை முதல் தோரணபதி சாலை வரை இருந்த தரைப் பாலத்தை உயர்மட்ட பாலமாக 190 லட்சம் மதிப்பில் 40. 68 மீட்டர் அளவில் புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு திட்டங்களை நேரடியாக மக்கள் அறியும் வகையில் செய்தியாளர் பயணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மேற்கொண்டு பாலத்தினை ஆய்வு மேற்கொண்டார்.