திருப்பத்தூர்: தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், அடுத்த பசிலிகுட்டை பகுதியைச் சார்ந்த மோகன் ரவீனா தம்பதியனரின் இரண்டு வயது சிறுமி தாத்தா தண்ணி தொட்டியில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தார். தண்ணீர் தொட்டியின் அருகே குழந்தை விளையாடிக் கொண்டிருந்த பொழுது தவறி விழுந்துள்ளார்.

குழந்தையைக் காணவில்லை என அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர் ஒரு மணி நேரம் ஆகியும் குழந்தை கிடைக்காததால் தண்ணீர் தொட்டியை பார்த்தபொழுது தண்ணீர் தொட்டியில் குழந்தை இருந்துள்ளது உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி