ராணிப்பேட்டை அருகே கார் கவிழ்ந்து விபத்து

ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கத்தில் இன்று பிப்ரவரி 12ம் தேதி செய்யாறு ஆரணி சாலையில் பனையூர் என்ற இடத்தில் ஒரு கார் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். கலவை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி