திருப்பத்தூர்: அப்பா, மகனை கடத்தி தாக்குதல்..போலீஸ் அதிரடி

திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் இவருடைய மகன் ஹரிஹரன். இவர் வெலக்கல்நத்தம் பகுதியில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் அவ்வப்போது மண் கடத்தல் தொழிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கந்திலி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த பழனியுடன் தொழில் போட்டியும் மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையும் இருந்து வந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி 8 பேர் கொண்ட கும்பல் சுரேஷ் அவருடைய மகன் ஹரிஹரன் இருவரையும் கடத்தி லட்சுமிபுரம் காப்பு காட்டில் வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்த நிலையில் மயக்கமடைந்த இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணகிரி செல்லும் சாலை ராயக்கோட்டை அருகே ரோட்டோரமாக அந்த கும்பல் வீசி சென்றுள்ளனர். மேலும் ரோட்டோரமாக இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அக்கம்பாக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து தனது கணவர் மற்றும் தன் மகன் காணவில்லை என தாயர் ஷீலா கந்திலி போலீசாரிடம் புகார் அளித்திருந்த நிலையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பழனி, மோகன் மற்றும் தமிழரசன், சூர்யா, அருள்குமார் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி