இதில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லீனா மாநில அளவில் முதல் பரிசு மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் கமலேஷ் முதல்வர் கோப்பைக்கான போட்டியில் முதல் பரிசு, 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நிசாந்தினி ஜூடோ போட்டியில் 3 ஆம் பரிசு பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கணிதவியல் ஆசிரியர் ஹரி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கந்திலி ஒன்றிய திமுக செயலாளர் மோகன்ராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவிந்தராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கடும் பனிமூட்டம் மற்றும் மழைக்கு வாய்ப்பு