ரயில் திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் நின்ற போது அருண்குமார் கிழே இறங்கி மற்றொரு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சேலம் செல்ல வேண்டியவர் திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் எதற்காக இறங்கினார் என்பது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.