திருப்பத்தூர்: மதுபான கடையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரின் வீடியோ வைரல்

திருப்பத்தூர் மாவட்டம் அரசு மதுபான கடையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களால் பரபரப்பு. வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல். 

திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் நேற்று இரவு கடையின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்ட இரு வாலிபர்கள். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரை மது போதையில் இருந்த இரண்டு வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு 'நீ என்ன 10 ஆயிரம் லஞ்சம் வாங்குறியா' என போலீசாரை தரக்குறைவாக பேசியுள்ளனர். 

ரகளையில் ஈடுபட்ட கண்ணாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான கோபி, கணேசன் இருவரையும் கந்திலி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரு இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி