அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர் தீயணைப்பு நிலையத்துக்கு ஆட்டோவை ஓட்டி சென்றார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஆட்டோவிற்குள் பதுங்கிய பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆட்டோவை கவிழ்த்தும், சீட்டுகளை அப்புறப்படுத்தியும் தேடி பார்த்தனர்.
சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர் ஆட்டோவின் பின்பக்க சீட்டின் அடியில் உள்ளே பதுங்கியிருந்த 2 அடி நீளமுடைய கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக தீயணைப்பு வீரர்கள் பிடித்து சாக்குப்பையில் போட்டனர். பின்னர் அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.