அரக்கோணம் அருகே 3 பேரை நாய் கடித்து காயம்

அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட மாதவ நகர் பகுதியில் பூ விற்பனை செய்து கொண்டிருந்த லட்சுமி அம்மாள் (60) மீது தெருநாய் பாய்ந்து கடித்து குதறியது. தொடர்ந்து, அதே பகுதியில் டேக்வாண்டோ பயிற்சிக்கு சென்றுகொண்டிருந்த சிறுவன் பேரரசு (12) மற்றும் அவனை காப்பாற்ற முயன்ற தந்தை தன்ராஜ் ஆகியோரையும் நாய் கடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாய்களை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி