வேலூரில் வேன் திருட்டு-போலீசார் விசாரணை

வேலூர் ஒல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (23) என்பவர், தனது சரக்கு வேனை சார்ப்பனாமேட்டில் உள்ள பள்ளி அருகே நிறுத்தியிருந்தார். இந்நிலையில், மர்மநபர்கள் வேனை திருடிச் சென்றனர். இதுகுறித்து வெற்றிவேல் நேற்று வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி