இதனால் விரக்தியடைந்த ராணி வீட்டிலிருந்து வெளியே போனவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராமாபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் ராணி பிணமாக மிதந்ததை கண்ட அங்கிருந்தவர்கள் அவளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் பிணத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.