ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், காவேரிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு ஜங்ஷன் அருகே நேற்று இரவு வாகன தணிக்கையின் போது, ஓட்டிகளுக்கு பாதுகாப்பாகவும் கவனமாகவும் வாகனங்களை நிறுத்தி தணிக்கை செய்ய அறிவுரை வழங்கினார். மேலும், பராமரிக்கப்படும் ஆவணங்கள் குறித்தும் அவர் கேட்டறிந்து கையொப்பமிட்டார். இந்த ஆய்வின் போது காவல் அதிகாரிகளும் உடனிருந்தனர்.