ராணிப்பேட்டை மாவட்டம் கணபதிபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த முனுசாமி (45) நேற்று (ஜன. 10) தனது வீட்டின் அருகில் உள்ள குட்டையில் குளித்தபோது திடீரென மூச்சுத் திணறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தக்கோலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.