ராணிப்பேட்டை மாவட்டம் வேடல் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (45) என்பவர் நேற்று (பிப். 15) காந்திநகர் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மரக்கட்டைகள் ஏற்றிச் சென்ற வேனின் பின்பக்கமாக அவரது பைக் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.