காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தமிழகத்திற்க்கு அதிகமான தண்ணீர் தேவைபட்டாலும், அத்தியாவசிய தேவைகக்காக ஒரு டிஎம்சி நீரை தமிழகத்திற்க்கு வழங்க வேண்டும் என காவேரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஒரு டிஎம்சி யை கூட தர மாட்டேன் என அடம்பிடித்தார்கள்.

நாங்கள் நிலைமைகளை விளக்கி நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினோம். அதன் பிறகும் அந்தப் போக்கில் இருந்து கர்நாடக அரசு மாறாமல் ஒரு டிஎம்சி வழங்க முடியாது என மறுத்துவிட்டு 8 ஆயிரம் கன அடி தருகிறோம் என சொல்கிறார்கள். ஒரு டிஎம்சி என்பது 11 ஆயிரத்தி 574 கனஅடி ஆகும்.

கர்நாடகாவில் தண்ணீர் இருக்கிறது. கே. ஆர். எஸ் ஆணையில் 105 ஆடி தண்ணீர் உள்ளது.
கபினியில் 64 அடித்தது. இது போன்று நமக்கு தண்ணீர் தரும் கர்நாடகாவில் உள்ள 4 அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளது.

15. 07. 2023 இதுவரை 4, 047 கன அடி தான் மேட்டூருக்கு தண்ணீர் வந்துள்ளது.தற்போது அங்கு மழை பெய்து வருவதால் அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் தமிழகம் அடுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுண்டரில் சந்தேகம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தது குறித்து கேட்டதற்க்கு, இன்வெஸ்டிகேஷனில் உள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி