ராணிப்பேட்டையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தைப் புறக்கணித்த பாஜக அரசையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் சுற்றுச்சூழல் இணைச் செயலாளர் வினோத் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி