கே. வி. குப்பம்: மத்திய அரசின் திட்டத்தை தொடங்கிவைத்த ஆட்சியர்!

வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் வட்டாரத்தில் சமூக வளர்ச்சி குறியீடுகளை பூர்த்தி செய்வதற்கான சம்பூரணதா அபியான் 2.0 திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (பிப். 20) கே. வி. குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் அப்பகுதியின் சமூக வளர்ச்சி மேம்படுத்தப்படும். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீப், ஒன்றியக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு செயலாளர் யுவராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி