ராணிப்பேட்டையில் பெண் காவலர் சஸ்பெண்ட்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு ஆதரவாக புகார் எழுதித் தர, பெண் காவலர் கல்பனா என்பவர் ரூபாய் 300 கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின் பேரில் பெண் காவலர் கல்பனா நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி