இந்த நிலையில் கோயில் ரோப்கார் கட்டிடத்தில் கோயில் ஆணையர் ஜெயா முன்னிலையில் யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், தக்கான்குளம் ஆஞ்சநேயர் கோயில் ஆகிய பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில் 64 லட்சத்து 73 ஆயிரத்து 795 ரூபாயும், 125 கிராம் தங்கமும், 236 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.