வேலூர் மாநகராட்சி, கீரின் சர்க்கிள் பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (19.05.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி காவல் கண்காணிப்பாளர் (வேலூர்) தனுஷ்குமார், NHAI பொறியாளர் ஜெயக்குமார், வேலூர் வட்டாட்சியர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.