பனப்பாக்கத்தில் கார் தொழிற்சாலை திறந்து வைத்த முதல்வர்!

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில், 9000 கோடி ரூபாய் முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு வாகன உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டு, முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று தொழிற்சாலையைத் திறந்துவைத்து முதல் வாகன இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆலை கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொழிற்சாலைக் கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த விழா நடைபெற்றது. டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன், இந்த நாளை டாடா குழுமத்திற்கு ஒரு பொன் நாள் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி