பைக்கில் இருந்து தவறி விழுந்து வாலிபர் படுகாயம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிகில் ஏரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சோளிங்கர் கரிக்கல் கிராமத்தைச் சேர்ந்த நண்பரை பார்த்துவிட்டு இரவில் வீட்டுக்கு திரும்பினார்.

அரக்கோணம் சோளிங்கர் நெடுஞ்சாலையில் கரிக்கல் ரோடு பகுதியில் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி