கூட்டத்தில் கழக வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துதல், 24 வார்டுகளிலும் பூத்கமிட்டி அமைத்தல், விளையாட்டு வீரர்கள் அணியை பலப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. பூத்கமிட்டிக்கு நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இளைஞர்களுக்கு நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சேவூர் ராமச்சந்திரன் எம். எல். ஏ. கேட்டுக்கொண்டார்.
முடிவில் ஜெயலலிதா பேரவை நகர அவைத்தலைவர் டபிள்யூ. ஜி. முரளி நன்றி கூறினார். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், பிற அணி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.