ராணிப்பேட்டை மாவட்டம் கோணலம் கிராமத்தில் உள்ள ஏரிப் பகுதியில் நேற்று ஒரு புள்ளிமானை நாய் துரத்தி கடித்ததில் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், உயிரிழந்த மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது.