அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர் குடியாத்தம் தாடிஅருணாசலம் தெருவை சேர்ந்த தரணி (34) என்பதும், அவர் ஓட்டிவந்தது திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர் பல்வேறு பகுதிகளில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தரணியை கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் 4 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.