ராணிப்பேட்டை மாவட்டம் அசநெல்லிகுப்பம் பகுதியில் இரவு நேரத்தில் கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் திருடு போன சம்பவங்கள் தொடர்பாக நெமிலி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், நேற்று சேந்தமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி, சந்தேகத்திற்கிடமான முறையில் தப்பி ஓட முயன்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார். விசாரணையில், அவர் அசநெல்லிகுப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவர்தான் ஆடு திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.