இந்த நிலையில் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மாதாந்திர பரிசோதனைக்காக அஸ்வினி சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதால் உள்நோயாளியாக அனுமதித்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த அருண்பிரகாஷ் குடும்பத் தகராறு காரணமாக இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அஸ்வினிக்கு தகவல் கொடுத்தனர். அவர் உறவினர்களுடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அருண்பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.