ஆம்பூர்: வேன் கவிழ்ந்து விபத்து-20 பேர் காயம்

ராணிப்பேட்டை அடுத்த சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 20 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். செய்யாறு நோக்கி சென்று கொண்டிருந்த வேன் ஒன்று சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 20-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி