குடியாத்ததில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் நேற்று கொத்தகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மணல் கடத்திய டிப்பர் லாரியை மடக்கிப் பிடித்தனர். லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் தப்பி ஓடிவிட்ட நிலையில், லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மணல் கடத்தல் தொடர்பாக குடியாத்தம் அருகே அணங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கே. வெங்கடேசன், காக் காதோப்பு அருந்ததி காலனியைச் சேர்ந்த ராஜேஷ், சரவணன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி