ராணிப்பேட்டை அருகே கார் பைக் மீது மோதி சப் இன்ஸ்பெக்டர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பலராமன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு பணி முடிந்து ஆற்காட்டில் உள்ள காவலர் குடியிருப்புக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். 

தாஜ்புரா என்ற இடத்தில் கார் பைக்கில் மோதியது. இதில் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் மருத்துவர் பரிசோதித்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி