ராணிப்பேட்டை: முக்கிய பிரமுகர் வருகையால் டிரோன் பறக்க தடை

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இன்று (29.05.2026) ஒரு நாளைக்கு டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு நடைமுறைகளின்படி மாவட்டம் 'தற்காலிக சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடித்தல், பலூன்கள் பறக்கவிடுதல், டிரோன் மூலம் மலர் தூவுதல், படப்பிடிப்பு செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் தகுந்த முன் அனுமதியின்றி டிரோன், RPAS, UAV பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி